நாடு முழுவதும் சோதனை அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நாணயங்களை முதற்கட்டமாக, மொத்த பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி, பங்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனவும், அரசு பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு மாதத்தில், சில்லரை வர்த்தக அளவில், டிஜிட்டல் நாணய பயன்பாடு விரிவுபடுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.