குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள 232 பொதுநல வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் 232 பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.