செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Oct 31, 2022 06:37:46 AM

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  

சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர் மோர்பி நகரிலுள்ள கேபிள் பாலத்தின் மீது நேற்று மாலை திரண்டிருந்தனர். சுற்றுலாத் தலமாக விளங்கும் அந்த பாலத்தில் அதிகளவில் மக்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக திடீரென அந்த தொங்குப் பாலம் அறுந்து விழுந்தது. குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர். பலர் பாலத்தின் விழுந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி உயிருக்குப் போராடினர்.

இது பற்றி அறிந்ததும் உள்ளுர் மக்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் முதலில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் இருந்து சடலங்கள் மீட்கப்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும் 177 பேர்மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என கூறப்படுகிறது. விடியவிடிய நடைபெற்ற மீட்புப்பணிகளில் முப்படைகள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களும் ஈடுபட்டனர்.

அங்கு போதிய மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்ததும் மீட்பு பணிக்கு பின்னடைவாக இருந்தது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தொங்குப்பாலம் பழுதடைந்ததால், புனரமைக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. அரசின் டெண்டரைப் பெற்று தனியார் நிறுவனம் ஒன்று இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளது. பணி முடிந்த பின் அதிகாரிகள் பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து சான்றிதழ் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாயும், மத்திய அரசு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து குஜராத்தில் இன்று பங்கேற்க இருந்த சில நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement