விண்வெளி துறையில் இந்தியா பல்வேறு அதிசயங்களை படைத்து வருவதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், சூரிய ஒளித்துறை மற்றும் விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதாக தெரிவித்தார்.
தீபாவளிக்கு முந்தைய நாளன்று, இந்தியா 36 செயற்கைக்கோள்களை ஒரே செயற்கைக்கோளில் அனுப்பியதாகவும், இதன்மூலம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், கட்ச்சில் இருந்து கோஹிமா வரையிலும் டிஜிட்டல் தொடர்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், கடை கோடியிலுள்ள பகுதிகளையும் நாட்டின் பிற பகுதிகளுடன் எளிதில் இணைக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கிரையொஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க, முன்பு வழங்க மறுக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அந்த தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியிருப்பதோடு, அதன் மூலம் ஏராளமான செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.