இந்தியா உலகளவில் பொருளாதார வளர்ச்சி பெறுவதை விரும்பாத சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்ள கவனமாக செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பகைமையைத் தூண்டும் வகையிலும், சைபர் தாக்குதல் நடக்கும் வகையிலும் உருவாக்கப்படும் புதிய வகை சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி அவர் காவல்துறை உளவுத்துறை உள்ளிட்ட ஏஜன்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய தேசவிரோத ,சமூக விரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.