நாடு முழுவதும் ஒரே மாதிரியான காவல் சீருடை இருப்பது குறித்து மாநிலங்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர் மோடி, இதனை தான் திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் யோசனையாகவே முன்வைப்பதாகவும் கூறினார்.
ஹரியானாவின் சூரஜ்குந்தில் நடைபெறும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான 2 நாள் 'சிந்தன் சிவிர்' (Chintan Shivir) மாநாட்டில் பிரதமர் காணொலி வாயிலாக பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநிலத்தின் பொறுப்பு என்றும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.