மும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் 2 நாள் கூட்டம், மும்பை தாஜ் ஹோட்டலில் இன்று தொடங்கியது. இதில் பேசிய ஜெய்சங்கர், மும்பையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது, சர்வதேச சமூகம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்றும், அத்தாக்குதலில் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தோரை மட்டும் அடையாளம் தேடி பிடித்து, பயங்கரவாதிகள் கொலை செய்தனர் என்றும் குறிப்பிட்டார்.
மும்பைத் தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது என்ற ஜெய்சங்கர், இத்தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து நாடுகளும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.