சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநிலங்களின் பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் சூரஜ்குந்தில் நடைபெறும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான 2 நாள் சிந்தன் சிவிர் மாநாட்டில், டெல்லியில் இருந்து காணொலி மூலம் உரை நிகழ்த்திய அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநிலத்தின் பொறுப்பு, அதே நேரத்தில் இவை அனைத்தும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது என்றார்.
சட்டம் ஒழுங்கு ஒரு மாநிலத்துடன் கட்டுப்படவில்லை, குற்றச்சம்பவங்கள் தற்போது பல்வேறு மாநிலங்கள் இடையேயும், சர்வதேச அளவிலும் நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களிலும் கிரிமினல்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், எனவே கிரிமினல்களை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக விழிப்புடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.