இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி நாளை டெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று கொண்ட பின்னர் கடந்த செவ்வாய் கிழமை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லியிடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், பயங்கரவாத ஒழிப்பு, இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் உக்ரைன் மோதல் உள்ளிட்டவை பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் பதிவிட்டார்.