பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்க உள்ள நிலையில், உலகளாவிய பங்குசந்தைகள் நேற்று உயர்வுடன் காணப்பட்டன.
ரிஷி சுனக் பிரதமராக வருவார் என தகவல் உறுதியானதை அடுத்து உலகளாவிய பங்குகள் மற்றும் பிரிட்டன் நாணயமான பவுண்டு மதிப்பு உயர்ந்தது.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் மந்தநிலை இருந்தபோதிலும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. ஐரோப்பிய எரிவாயு விலை ஜூன் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக வெகுவாகக் குறைந்தது. பிரிட்டன் பொருளாதாரத்தை ரிஷி சுனக் மாற்றுவார் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.