நாட்டின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்கள், கமாண்டோ வீராங்கனைகள் பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் ராணுவ வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்துக் கூறிக் கொண்டு தீபாவளியை மத்தாப்பூ கொளுத்தி கொண்டாடினர்.
எல்லைக்கு அருகே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பெண் கமாண்டோக்களும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியுடன் தீபாவளிக் கொண்டாட்டத்தைத் தொடங்கினர்
ராணுவத்தினர் தங்கள் குடும்பத்தினர் அனுப்பிவைத்த இனிப்புகளையும் பகிர்ந்து பரிமாறிக் கொண்டனர்