10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண 10 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும் நிகழ்வில் காணொலியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்.
நாடு முழுவதும் புதிதாக வேலைக்கு எடுக்கப்படுகிறவர்கள் மத்திய அரசின் 38 அமைச்சகங்களிலும், துறைகளிலும் சேருவார்கள்.