காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளைத் தேர்தல் நடைபெறுகிறது.
இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி, அப்பதவியில் தொடர விரும்பாததால், தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, சங்காநல்லூரிலுள்ள முகாமில் இருந்தபடி வாக்களிப்பார் என்று, மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் வரும் 19ம் தேதி எண்ணப்படும். இத்தேர்தலில் கார்கே அல்லது சசிதரூரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்று, பதவி ஏற்றால், 24 ஆண்டுகளில் அப்பதவியை ஏற்கும் சோனியா குடும்பத்தை சாராத முதல் நபர் எனும் பெருமையை பெறுவார்.