கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நரபலி சம்பவத்தில் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையின் உச்சமாக இரு பெண்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த சம்பவத்தில் போலி மந்திரவாதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளது.