மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சன்சோடா கிராமத்தில் கள்ளச்சாராய ரெய்டிற்கு சென்ற போலீசார், அடிபம்பில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அடிபம்பில் அசுத்தமான நீர் வருவதாக முதலில் நினைத்த போலீசாருக்கு பின்னர் அது கள்ளச்சாரயம் என்பது தெரியவந்துள்ளது.
நிலத்தை தோண்டி பார்த்தபோது, 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த டேங்கில் சாரயத்தை பதுக்கி வைத்து, தேவைப்படும்போது பம்பில் அடித்து, பாலித்தீன் கவரில் பிடித்து விற்பனை செய்தது தெரியவந்தது