ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக, சுகாதாரமற்ற முறையில் கழுதை இறைச்சியை விற்ற 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், சுமார் 400 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கழுதை இறைச்சி சாப்பிட்டால் வேகம், வலிமை மற்றும் சுவாசப்பிரச்சனைகளை தீர்வு காணமுடியும் என, சிலர் நம்புகின்றனர்.
குறிப்பாக கழுதை இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும் என நம்பப்படுவதால், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கழுதைகள் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கழுதை இறைச்சியை உண்பது சட்டவிரோதமானது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.