மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி தேர்வு முறைகேடு வழக்கில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. மாணிக் பட்டாச்சார்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
வழக்கை தொடர்ந்த விசாரித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மாணிக் பட்டாச்சார்யாவின் செல்போனில் பணம் வாங்குவது தொடர்பான தகவல் ஒன்று இருந்ததை கண்டு பிடித்தனர்.
இதனை அடிப்படையாக கொண்டு, அவரை அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது.