நகர்ப்புற நக்சல்கள் ஆற்றல் மிக்க இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், நம் இளம் தலைமுறையை சீரழிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பரூச் மாவட்டத்தில் மருந்து பூங்கா உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் வியாபாரிகள், கைவினை கலைஞர்கள் உள்ளிட்டோரை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
உலகளவில் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் கடந்த 2014ஆம் ஆண்டில் 10ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5ஆவது இடத்தை பிடித்துள்ளதாகவும், இதற்கான பெருமை இளைஞர்கள், விவசாயிகள், சிறு மற்றும் பெரிய வர்த்தர்களையே சேரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, குஜராத்தில் நக்சல்களை ஊடுருவ விடாமல் தடுத்ததாக பழங்குடியின சமூகத்தினரைப் பாராட்டினார்.