அசாமில் சாலையைக் கடக்க முயன்ற காண்டா மிருகம், சரக்கு லாரி மீது மோதி காயமடைந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, காசிரங்கா பகுதியில் 32 கிலோ மீட்டர் தூர மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.
ஹல்திபாரி என்ற இடத்தில் சரக்கு லாரி ஒன்று சென்றபோது, சாலையில் சென்ற காண்டா மிருகம், அதன் மீது மோதி சரிந்து விழுந்தது. பின்னர் எழுந்து நடந்த காண்டா மிருகம், மீண்டும் தடுமாறி கீழே விழுந்து பிறகு காட்டுப் பகுதிக்குள் சென்றது.