2 கோப்புகளில் கையெழுத்திட, 300 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, மேகாலய முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக, சத்யபால் மாலிக் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், 2019ம் ஆண்டு அக்டோபர் வரை பதவி வகித்தார். கடந்த 3ம் தேதியுடன் மேகாலய மாநில ஆளுநர் பதவியிலிருந்து சத்யபால் மாலிக் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்தபோது, 2 கோப்புகளில் கையெழுத்திட லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்தில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.