உலக நாடுகளை விட, இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட அமெரிக்க நாடுகளில் பெட்ரோல் - டீசல் விலை, 43 முதல் 46 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், ஆனால் இந்தியாவிலோ 2 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வது குறித்த கேள்விக்கு, தாம் விரும்பும் நாட்டிடம் இருந்து, இந்தியா இறக்குமதி செய்யும் என்றும், இந்த இறக்குமதியை நிறுத்தும்படி, அமெரிக்க அரசிடம் இருந்து நெருக்கடி தரப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் புரி குறிப்பிட்டார்.