முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டது.
முதல் இலகு ரக ஹெலிகாப்டரை ராணுவத்தின் விமானப்படை ஜெனரலிடம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் முறைப்படி ஒப்படைத்தது.
சுமார் மூவாயிரத்து 887 கோடி ரூபாய் மதிப்பில் 15 இலகுரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்த நிலையில், 10 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கும், 5 ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திற்கும் வழங்கப்படவுள்ளன.