பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார்.
சூரத் நகரில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை அவர் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.பிரதமர் மோடி
அங்கிருந்து பாவ்நகர் சென்று 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இரவு 7 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
குஜராத்தில் 6 நகரங்களில் நடைபெறும் இப் போட்டிகளில் 7 ஆயிரம் வீரர்- வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
பின்னர், இன்று இரவு ஜிஎம்டிசி மைதானத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
நாளை காலை, காந்திநகர்-மும்பை வந்தே பாரத்எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காந்தி நகர் ரயில்நிலையத்திலிருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில் கலுபூர் ரயில் நிலையம் வரை பிரதமர் மோடி பயணிக்கிறார். அங்கு அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கஉள்ளார்.