முப்படை தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகானை (Anil Chauhan) மத்திய அரசு நியமித்துள்ளது.
முப்படை தலைமை தளபதியாக இருந்த விபின் ராவத், ஊட்டி அருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த பதவியில் மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பு முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அனில் சவுகான் அப்பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இவர், ராணுவ விவகாரங்கள் துறையில் அரசின் செயலாளராகவும் செயல்படுவார் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.