குறைந்த தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையிலான ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ. அமைப்பால் வடிவமைக்கப்பட்ட அந்த ஏவுகணை, ஒடிசாவின் சந்திப்பூர் கடற்பகுதியில் சோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
குறைந்த உயரத்தில் உள்ள வான்வழி அச்சுறுத்தல்களை தாக்கி அழிக்கும் வகையில் அந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. ஏவுகணையையும், அதனை செலுத்தும் லாஞ்ச்சரையும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.