கேரளா பயங்கரவாதத்தின் மையமாக மாறி வருவதாகவும், அரசு இதனை ஆதரிப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜே.பி.நட்டா, கேரள மக்கள் தங்களை பாதுகாப்பாக உணரவில்லை என்று தெரிவித்தார்.
வன்முறையை ஏற்படுத்துவபர்களுக்கு மாநில அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாகவும், முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மற்றும் மருமகன் ஆட்சியில் தலையிடுவதாகவும் ஜே.பி.நட்டா விமர்சித்தார்.