புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 பேருக்கு இன்ஃப்ளுவன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 7 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இன்ஃப்ளுவன்சா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொருட்டு பரிசோதனைகளை தீவிரப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.