மொபைல் போன் பயனாளர்களுக்கு போலி அழைப்புகள், மோசடி குறுந்தகவலில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கின்ற வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர உள்ளது.
இந்த மசோதா மூலம் போலியான அழைப்புக்கள், மோசடி குறுந்தகவல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்பதை அறிவதுடன் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமையும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதற்கான வரைவு மசோதா பொதுமக்களின் கருத்துக்களுக்காக சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்து.
உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, 10 மாதங்களில் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.