நாடு முழுவதும் 4 லட்சத்து 37ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிய அங்கன்வாடி மையங்களிலோ அல்லது அவற்றுக்கு அருகிலோ ஊட்டச்சத்து தோட்டங்களை அமைப்பதற்கு இடங்களை தேர்வுசெய்ய இதுவரை 40 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களில் ஒரு லட்சத்து 10ஆயிரம் மூலிகைச்செடிகள் நடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.