ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, புறப்பாடு, வழித்தடம் என ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை தானாக பெறுவதற்கு ரயில் என்ஜின்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் பொருத்தப்பட்ட என்ஜின்கள் மற்றும் ரயில்களின் இருப்பிடம், வேகம் உள்ளிட்டவற்றை எவ்வித தலையீடுமின்றி கண்காணிக்க முடியும் என்றும், தற்போது 2ஆயிரத்து 700 என்ஜின்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.