பாதம் முதல் முழங்கால் மூட்டுக்கு மேல்வரை பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் சுழல் தன்மை அறிவாற்றல் கொண்ட செயற்கை கால்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்துள்ளது.
1.6 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கால்கள், ஒரு நுண்செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த செயற்கை காலை மேலும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு வரும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்கை கால்களில் உள்ள மைக்ரோ ப்ராசஸர், மோட்டார், சென்சார் ஆகியவை இதனை பொருத்தி நடப்பவரின் தன்மைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு, நடப்பதை மிக எளிமையாக மாற்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.