பூமியில் இருந்து 4.3 பில்லியன் கி.மீ.தொலைவிலுள்ள வளையங்களுடன் கூடிய நெப்டியூன் கோளை தெளிவாகவும், துல்லியமாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது.
முற்றிலும் பனிக்கட்டியால் நிரம்பி ராட்சத கோளாக சூரியனை வலம் வரும் நெப்டியூனில் சனி கோள் போன்று வளையங்கள் உண்டு. 1989-ஆம் ஆண்டு முதன் முதலாக நாசாவின் வாயேஜர்-2 விண்கலம் நெப்டியூன் வளையங்களுடன் இருக்கும் ஒரு தெளிவற்ற படத்தை படம்பிடித்தது.
நெப்டியூனின் அடர்த்தியற்ற வளையங்களை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி தனது நியர் இன்ப்ராரெட் கேமரா மூலம் படம்பிடித்திருக்கிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மத்திய அகச்சிவப்பு கருவியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.