கேரளாவில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனரில் இருந்த சாவர்க்கரின் படத்தை மறைக்க மகாத்மா காந்தியின் படம் ஒட்டப்பட்டது.
கொச்சியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை வரவேற்க சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களுடன், சாவர்க்கரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
இது பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சை எழுந்ததால், உடனடியாக உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் வீரசாவர்கரின் புகைப்படத்தை மறைத்து மகாத்மா காந்தியின் புகைப்படத்தை ஒட்டினர்.