பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணையைத் தொடர உள்ளது.
மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குச் செல்வதன் பின்னணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் திட்டமிட்ட சதி இருப்பதாக கர்நாடக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மூலமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு மாணவிகள் ஹிஜாப் அணிய வைக்கப்பட்டனர் என்றும் கடந்த 2022 வரை மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.