எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்குகிறது என்றும், தகுதியானவர்கள் http://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற அதிகாரபூர்வ இணையதளங்களில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.