புதுச்சேரியில் பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களும், பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனுதர்ம நூல் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள், போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது எனக்கூறி ஊர்வலமாக சென்ற போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் செருப்பு, பிளாஸ்டிக் வாளி மற்றும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
இதில் இருவர் காயம் அடைந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.