பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று கட்சியை தொடங்கிய முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், கிரன் ரிஜிஜு முன்னிலையில் அக் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
மேலும் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார் மேலும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்தனர்.