உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே தரைப்பாலத்தை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
பதேபூர் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடி கொண்டிருக்கும் பகுதியை கடந்து செல்ல இளைஞர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
ஆனால், வெள்ள நீரின் ஓட்டம் அதிமாக இருந்ததால் அந்த இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.