பாலியல் வழக்கில் கர்நாடக காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி மனோஜ் கர்ஜாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள கர்ஜாகிக்கு சொந்தமான சலூனில் வேலை செய்து வந்த 19 வயது பெண்ணிடம் கர்ஜாகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கர்ஜாகி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்த தார்வாட் போலீசார், அவரை கைது செய்தனர்.
காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆட்சியின் போது வடமேற்கு கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்தின் முன்னாள் இயக்குநராக மனோஜ் கர்ஜாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.