நடிகை சோனாலி போகத் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் அவர் தங்கியிருந்த கோவா ஓட்டலுக்குச் சென்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சோனாலி போகத் கோவாவில் நடைபெற்ற பார்ட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் போதைப் பொருள் கொடுத்து கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில் போலீசாரிடமிருந்து இவ்வழக்கை சிபிஐ ஏற்றுக் கொண்டது.
நேற்று சிபிஐ அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் குழு ஒன்றும் கோவாவின் கடற்கரை ரிசார்ட் உள்ளிட்ட இடங்களில் சோனாலி போகத்தின் கடைசி நாள் நடமாட்டத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டனர்.