கிழக்கு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் பின்வாங்கி சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தனியார் நிறுவனம் ஒன்றால் ஆகஸ்ட் 12ம் தேதியும், இம்மாதம் 15ம் தேதியும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்து, ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய படைத் தளத்தையும், சண்டையிட தேவையான வசதிகளையும் சீனா உருவாக்கியிருந்ததாகவும், ஆனால் 16ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொண்டதால் அப்பகுதி வெறுமையாக காட்சியளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.