உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நட்சத்திர தங்கும் விடுதியை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கேபிக்கோ ரிசார்ட் என்ற பெயருடைய அந்த தங்கும் விடுதி, அரசு நிலத்தை ஆக்கிரமித்தும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதியை மீறியும் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 36 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ரிசார்ட் விடுதிகளை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
கட்டிடங்களை இடிக்கும் பணிக்கு ஆகும் செலவையும் ரிசார்ட் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.