ஹிஜாப் அல்லது புர்கா ஆடையை அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இப்பிரச்சினை காரணமாக எத்தனை மாணவிகள் படிப்பை கைவிட்டனர் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பான மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள், பள்ளி கல்லூரிகளுக்கு வராமல் படிப்பை கைவிட்ட மாணவிகள் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாநிலத்தில் 17 ஆயிரம் மாணவிகள் படிப்பைக் கைவிட்டதாகத் தெரிவித்தார்.