குழந்தைகளை கடத்துபவர்கள் என்று தவறாக புரிந்து கொண்டு, 4 துறவிகளை கிராம மக்கள் தாக்கியது குறித்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த துறவிகள், சோலாப்பூரில் உள்ள பந்தார்பூருக்கு சுவாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருந்தனர்.
சாங்லி பகுதியில் சிறார் ஒருவரிடம் சில உதவிகளை அவர்கள் கேட்டபோது, அங்கு வந்த கிராம மக்கள், குழந்தைகளை கடத்துபவர்கள் என்று தவறாக புரிந்து கொண்டு தாக்கியுள்ளனர்.
துறவிகள் புகார் எதுவும் அளிக்காத நிலையில், தாக்கப்பட்டபோது சிலரால் எடுக்கப்பட்ட வீடியோவை ஆதாரமாக கொண்டு 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.