கேரள மாநிலம் இடுக்கி அருகே சுமார் 300 கிலோ எடை கொண்ட மரத்தடியை இளைஞர் ஒருவர் தூக்கிச் நடந்து சென்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தோப்புறான்குடி பகுதியில் மரத்தடியை தூக்கி நடந்து செல்லும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் பிரதீஷ் என்ற இளைஞர், அநாயசமாக மரத்தடியை தனது தோளில் வைத்து 73 மீட்டர் தூரம் நடந்து சென்றார். இணையதளங்களில் வீடியோவை பார்த்தபலரும் கேரளாவின் பாகுபலி என்று அவரை புகழ்ந்து வருகின்றனர்.