அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதில் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்க வேண்டும் என ரயில்வே விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிற்றுண்டியா? மதிய உணவா? என்பதை பயணிகளே தேர்வு செய்யலாம் என்றும் அந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.