இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஆசியாவில் அரிசி வர்த்தகம் முடங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உலக அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகின் முன்னணி அரிசி இறக்குமதியாளர்களாக உள்ளன.
நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி குறைந்ததால், கடந்த வாரம் பாசுமதி அல்லாத அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரியும், உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்ய தடையும் விதிக்கப்பட்டது.
20 சதவீத ஏற்றுமதி வரியை செலுத்த மறுப்பதால் இந்திய துறைமுகங்களில் அரிசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மற்ற போட்டியாளர்களான வியட்நாம், தாய்லாந்து மற்றும் மியான்மரில் இருந்து அரிசியை வாங்க நாடுகள் முயன்றுவருவதாக கூறப்படுகிறது. விலை உயர்ந்துள்ளதால் ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது