பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
15-ம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் அவர் நாளை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
15-ம் தேதி மும்பை செல்லும் கேத்தரின் தொழில்நிறுவன தலைவர்களை சந்திப்பதுடன், தொழில் நிறுவனங்களையும் பார்வையிடுகிறார்.
கேத்தரின் வருகை வர்த்தகம், பாதுகாப்பு, காலநிலை, கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.