உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டதால் பெண் நோயாளிக்கு மொபைல் போன் டார்ச் மூலம் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.
பாலியா மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்ட நிலையில், அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஜெனரெட்டரை இயக்கி உடனடியாக மின் விநியோகத்தை சீரமைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த பெண் நோளாளிக்கு செல்போன் மூலம் வெளிச்சம் பரப்பி மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஆர்டி ராம், ஜெனரேட்டரில் இருக்கும் பேட்டரிகள் அடிக்கடி தொலைந்து போவதால் அதை தனியாக எடுத்து வைத்துள்ளதாகவும், அதனால் பேட்டரிகளை கொண்டு வர சுமார் 20 நிமிடம் தாமதமானதாகவும் கூறியுள்ளார்.