பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லலித் நாராயண் மிதிலா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளங்கலை 3-ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, வழங்கப்பட்ட ஹால்டிக்கெட்டுகளில் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட்டுகளில் புகைப்படங்கள் மற்றும் தரவுகளை மாணவர்களே ஆன்லைன் மூலமாக பதிவேற்றியதாகவும், அவர்களில் சிலர் புகைப்படங்களை மாற்றி பதிவேற்றி இருக்க வாய்ப்புள்ளதாகவும், பல்கலைக் கழக பதிவாளர் கூறியுள்ளார்